நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில்! வைத்தியர்கள் கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (26) கொழும்பு கோட்டை நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்படவிருந்த போதிலும், அவரது தற்போதைய உடல்நிலை காரணமாக அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (CNH) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ”அடுத்த மூன்று நாட்களுக்கு மருந்து மற்றும் ஓய்வு எடுக்குமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
முந்தைய நாள் அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் இதயத் துடிப்பு அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைகளில் தலைவலி போன்ற அறிகுறிகளுடன் சிறுநீரக அளவுருக்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்தது.
அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
தற்போது அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இல்லை என்றாலும், சிக்கல்கள் ஏற்பட்டால், அவரது நிலை மோசமாகலாம். சரியான சிகிச்சையுடன், அவர் குணமடையக்கூடும், ஆனால் அடுத்த மூன்று நாட்களுக்கு அவருக்கு ஓய்வு மற்றும் மருந்து தேவை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
விளக்கமறியலுக்குப் பிறகு அவர் முதலில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் பின்னர் சிறைச்சாலையில் விசேட சிகிச்சை வழங்கப்படவில்லை என மருத்துவ மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியதை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

