இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க டெஸ்ட்ராயர் கப்பலை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்

United States of America Iran Israel-Iran conflict
By Dharu Mar 04, 2026 10:48 AM GMT
Report

இந்தியப் பெருங்கடலில் இருந்த ஒரு அமெரிக்க டெஸ்ட்ராயர் கப்பலைத் தாக்கியுள்ளதாக  ஈரான் புரட்சிகர காவல் படை(IRGC) தெரிவித்துள்ளது.

அந்தப் போர்க்கப்பல் “Ghadr-380” மற்றும் “Talaieh” ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளதாவது: ​

"இந்தியப் பெருங்கடலில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் அழிப்புக் கப்பலை (Destroyer) இலக்கு வைத்து ஈரானிய கடற்படை தாக்குதல் நடத்தியது. ​

எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் அழிப்புக் கப்பல் ஆகிய இரண்டுமே இலக்கு வைக்கப்பட்டதாகவும், அவற்றின் தளங்களிலிருந்து புகையும் நெருப்பும் எழும்புவதைக் காண முடிந்தது” என்றும் அது தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது தாக்குதல்

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது தாக்குதல்

Ghadr ஏவுகணை 

" Ghadr ஏவுகணை 2,000 கிலோமீட்டர் வரை துல்லியத் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும். Talaieh என்பது 1,000 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளைத் தாக்கக்கூடிய ஒரு மூலோபாய க்ரூயிஸ் ஏவுகணை அமைப்பாகும்.

இது பணி நடைபெறும் போது இலக்கை மாற்றக்கூடிய திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த டெஸ்ட்ராயர் ஒரு அமெரிக்க டேங்கர் கப்பலிலிருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டது என்றும் IRGC தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் இரு கப்பல்களிலும் “பரவலான தீப்பற்றல்கள்” ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக IRGC “True Promise 4” என்ற குறியீட்டு பெயரில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் உள்ளிட்ட மேற்கு ஆசியப் பிராந்தியங்களில் உள்ள அமெரிக்க நலன்களையும், “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள்” என குறிப்பிடப்படும் இடங்களின் ஆழப்பகுதிகளில் உள்ள பல முக்கிய மற்றும் நுணுக்கமான இலக்குகளையும் தாக்கியதாக IRGC கூறியுள்ளது.

சற்று முன்னர் ஈரானிய ஜெட் விமானத்தை சுட்டுவீழ்த்தியது இஸ்ரேல் : 40 ஆண்டுகளின் பின்னர் நடந்த வான்வழிப்போர்

சற்று முன்னர் ஈரானிய ஜெட் விமானத்தை சுட்டுவீழ்த்தியது இஸ்ரேல் : 40 ஆண்டுகளின் பின்னர் நடந்த வான்வழிப்போர்

நடவடிக்கையின் 16வது கட்டம் 

IRGC வெளியிட்ட அறிக்கையில், “True Promise 4” நடவடிக்கையின் 16வது கட்டம் அமெரிக்கா - இஸ்ரேல் படைகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. அதன் வான்வெளி பிரிவு மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் இதயப்பகுதி மற்றும் வடப்பகுதிகள்” தாக்கப்பட்டது.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க டெஸ்ட்ராயர் கப்பலை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள் | Iranian Missiles Hit Us Destroyer In Indian Ocean

அதன் இலக்குகளாக இஸ்ரேல் இராணுவத்தின் பொது தளபதி அலுவலகம், ஹகிரியாவில் உள்ள போர் அமைச்சகம், Bnei Brak பகுதியில் உள்ள முக்கிய மூலோபாய கட்டமைப்புகள், டெல் அவீவின் வடகிழக்கே உள்ள Beit Hakfa பகுதியில் உள்ள இராணுவ இலக்குகள், மற்றும் மேற்கு கலிலேயில் உள்ள இராணுவ மையம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இரானின் பதிலடி தாக்குதலின் நான்காவது நாளில் 680-க்கும் மேற்பட்ட “எதிரி” உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தனது உளவுத்துறை தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளில் செயல்பாட்டு பலவீனம், தொழில்நுட்ப குறைபாடுகள் மற்றும் கணினி செயல்திறன் குறைவு காரணமாக ஈரான் ஏவுகணைகள் ஊடுருவி தாக்கும் வகையில் வான்வழி பாதைகள் திறந்துவிட்டன என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

ஈரானின் அடுத்த உச்ச தலைவரே இஸ்ரேலின் இலக்கு

ஈரானின் அடுத்த உச்ச தலைவரே இஸ்ரேலின் இலக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026