வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை தாமதம் : வெளியான தகவல்
யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று இயந்திர சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தொடருந்து வவுனியா - புளியங்குளம் பகுதியில் இயந்திர சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை தாமதமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
சீர் செய்வதற்கான நடவடிக்கைகள்
இந்தநிலையில் தொடருந்தின் இயந்திர சிக்கலைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை டித்வா புயலால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து, தொடருந்து பாதையில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளுக்காக கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முதல் வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்திய அரசின் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பங்களிப்பில் இந்த மார்க்கத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |