முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட்

Sri Lankan Tamils Sri Lanka Final War
By Independent Writer Apr 27, 2026 09:15 AM GMT
Report
Courtesy: பா . பிரியங்கன்

உலக இராணுவ வரலாற்றில் ஒரு சில சமர்கள் நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதற்காக நடத்தப்படுகின்றன , சில சமர்கள் எதிரியின் முதுகெலும்பை உடைப்பதற்காக தமது பலத்தை நிரூபிப்பதற்காக நடத்தப்படுகின்றன.

ஆனால், ஈழ வரலாற்றில் கடந்த 2001 ம் ஆண்டு ஏப்ரல் 25 முதல் 27 வரை வடபோர்முனையின் தலைப்பகுதியான முகமாலை மண்ணில் நடந்த தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என்பது வேறானது , ஒரு அரச இயந்திரத்தின் நவீன படைபலத்தை, ஒரு அரசல்லாத விடுதலை அமைப்பின் அறிவுவார்ந்த போர்த்திறம் எப்படி சகலவழிகளிலும் நிலைகுலையச் செய்ய முடியும் என்பதற்கான உலகத்தரம் வாய்ந்த சான்றாகும்.

உலகப் போர்க்களங்களுடன் தீச்சுவாலை உண்மையில் தீச்சுவாலை நடவடிக்கையையும் வீறுடைய போர்க்கள நிகழ்வுகளையும் வெறும் வன்னிப்பரப்போடு நிறுத்திவிடாமல் அதன் உக்கிரத்திற்காகவும், தற்காப்பு உத்திகளுக்காகவும் வரலாற்றின் மூன்று முக்கிய போர்க்களங்களோடு ஒப்பிட முடியும்.

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்

சோவியத் படை

01 . ஸ்டாலின்கிராட் போர் (1942-1943, ரஷ்யா) இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் ஆறாவது படையணி ரஸ்யாவின் ஸ்டாலின்கிராடைச் சூழ்ந்தபோது, சோவியத் படைகள் ஒரு அங்குலத்தைக் கூட விடாமல் தற்காப்பு யுத்தம் செய்தன.

ஸ்டாலின்கிராட் எப்படி ஜேர்மனிய நாஜிக்களின் வீழ்ச்சிக்குத் ஆரம்பப்புள்ளியாக அமைந்ததோ, அதேபோலவே 'தீச்சுவாலை' போர் நடவடிக்கையும் சிறிலங்கா இராணுவத்தின் அசைக்க முடியாது என்ற பிம்பத்தை உடைத்தது.

சுமார் 20,000 சிறிலங்க இராணுவ துருப்புக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பில் வைத்துச் வீழ்த்தி வெற்றி கண்டது எப்படியென்றால் சோவியத் படைகளின் நகரப் போர் (Urban Warfare) தந்திரங்களுக்கு நிகரானது என்றே கூறமுடியும் .

02. தென் பின் பூ போர் 1954, வியட்நாம் அதேபோலவே அந்த நாட்களில் பிரான்சியப் படைகள் தமது வான்பலம் மற்றும் பீரங்கிப் பலத்தை நம்பி ஒரு பள்ளத்தாக்கிற்குள் வியட்நாமியப் படைகளைச் சிக்க வைக்க முயன்றன. ஆனால், வியட்நாமிய படைகள் பீரங்கிகளை மலைகளுக்கு மேல் கைகளால் இழுத்துச் சென்று பிரான்சியப் படைகளை எதிர்பாராத அதிர்ச்சிக்குள் உட்படுத்தியது .

அதேபோன்ற ஒரு யூகிக்க முடியாத பீரங்கித் தாக்குதலைத்தான் விடுதலைப் புலிகள் அமைப்பு முகமாலையில் நிகழ்த்திக்காட்டினார்கள் . அன்று வான்படை வழங்கல்களைத் துண்டித்து, தரையிறங்கிய படைகளைத் தனிமைப்படுத்திய உத்தி அப்படியே தென் பின் பூ போர்க்களத்தையும் கூட நினைவூட்டுகிறது.

தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை உரையாடலுக்கு உட்படுத்துவத வேண்டும்

தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை உரையாடலுக்கு உட்படுத்துவத வேண்டும்

தார்மீக மற்றும் உத்திசார் வேறுபாடு

03 . தெர்மோபைலே போர் (Battle of Thermopylae, கி.மு. 480) இன்னுமொருபுறம் பார்க்கிறபோது பாரசீகத்தின் இலட்சக்கணக்கான படைகளை ஒரு குறுகிய கணவாயில் வைத்து ஸ்பார்ட்டன் வீரர்கள் மறித்ததைப் போல, வெறும் 6 கி.மீ அகலமே கொண்ட முகமாலை நிலப்பரப்பில் வைத்து சுமார் 20,000 இராணுவ துருப்புகளை இடைமறித்து நின்று விடுதலைப் புலிகள் அன்று நிகழ்த்திய தற்காப்புப் போர், போரியல் வரலாற்றில் ஒரு Bottleneck Defense உத்திக்குச் மிகச்சிறந்த உதாரணம்.

உலக இராணுவங்களிலிருந்து விடுதலைப் புலிகள் எங்கு வேறுபட்டு நிற்கிறார்கள்? இத்தகு நடவடிக்கை ரீதியிலான ஒப்பீடுகளோடு பார்க்குபோதுதான் ஒரு மரபுவழி அரசமைந்த இராணுவம் மற்றும் ஒரு புரட்சிகர அரசல்லாத இராணுவம் ஆகியவற்றுக்கு இடையேயான போர்நிகழும் நிலத்தின் தார்மீக மற்றும் உத்திசார் வேறுபாடுகளை தீச்சுவாலை நடவடிக்கை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

அ) வான் ஆதிக்கத்தை முறியடித்த தரைசார் உத்தி நமது சமகால நவீன போரியல் விதிகளின்படி, வான் ஆதிக்கம் உள்ள தரப்பே வெற்றி பெறும் என்ற நியதியுண்டு ஆனால், தமக்கென்று ஒரு வான்படை இல்லாமலேயே விடுதலைப் புலிகள் சிறிலங்க அரச படைகளின் வான்படையின் தாக்குதல்களை செயலிழக்கச் செய்தனர்.

அதேபோல இராணுவத்தின் வழங்கல் பாதைகளைத் துல்லியமான பீரங்கிச் சூட்டின் மூலம் தகர்த்து, வான்படை குண்டுகள் வீசிக் கொண்டிருக்கும்போதே எதிர்தாக்குதல. நடவடிக்கையினை நடத்தியது உலக இராணுவங்களில் போரியலில் அரிதானது.

இது Asymmetric Advantage எனப்படும் சமச்சீரற்ற போரின் உச்சகட்டமாகும்.

ஆ) ஆழமான தற்காப்பு' மற்றும் கண்ணிவெடிப் பொறியியல் இதுவரை உலக இராணுவங்கள் கண்ணிவெடிகளை வெறும் தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்தும். ஆனால் விடுதலைப் புலிகள் கண்ணிவெடிகளை ஒரு "தாக்குதல் கருவியாக" (Offensive Mine Warfare) மாற்றினார்கள் அதாவது எதிரியை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நுழையவிட்டு அவர்களை அங்கிருந்து நகர முடியாமல் கண்ணிவெடி வயல்களுக்குள் சிறைபிடித்து, அதன் பின் பீரங்கிகளால் அழிப்பது என்பது விடுதலைப் புலிகளுக்கே உரித்தான ஒரு தனித்துவமான உத்தி ஆகும் .

குறிப்பாக இது அமெரிக்க அல்லது நேட்டோ படைகளின் தற்காப்புப் பயிற்சிகளையே மிஞ்சக்கூடிய தொழில்நுட்பப் பயன்பாடு எனவும் கூறமுடியும் .

அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு

அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு

போராளிகள் காட்டிய உறுதிப்பாடு 

இ) தார்மீக உறுதி லெப். கேணல் சுதந்திரா உலக இராணுவங்களின் வரலாற்றில் ஒரு இராணுவ வீரனை பொறுத்தவரை தனது காப்பரண் சூழப்பட்டால் அந்த இடத்திலையே சரணடைதல் அல்லது பின்வாங்குதல் என்ற உத்தியைத் தேர்ந்தெடுப்பான்.

ஆனால், லெப். கேணல் சுதந்திரா போன்ற போராளிகள் காட்டிய உறுதிப்பாடு உலக இராணுவ வரலாற்றில் ஒரு விசித்திரம் என்று குறிப்பிடலாம் உலகில் போராடும் இனங்களுக்கு எல்லாம் ஒரு ஆகச்சிறந்த வழிகாட்டல் குறிப்புகளாகும் .

தனது காப்பரன் எதிரிகளால் சூழப்பட்ட நிலையிலும் இறுதிவரை சமராடி எதிரிக்கு அதிகபட்ச சேதத்தை விளைவித்து வீரச்சாவடைவது என்பது இந்த உலகில் எந்த மூலையிலும் சம்பளம் வாங்கும் வீரர்களால் செய்ய முடியாது.

இந்த சித்தாந்த ரீதியான அர்ப்பணிப்பு (Ideological Commitment) தான் விடுதலைப் புலிகளை உலகின் ஆகச்சிறந்த தரைப்படையாக மாற்றியது.

உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…

உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…

மக்கள்-இராணுவ ஒருங்கிணைப்பு

ஈ) மக்கள்-இராணுவ ஒருங்கிணைப்பு உலகப்போரியல் வரலாற்றில் இதுவரை எந்த இராணுவ நடவடிக்கையின் போதும் பொதுமக்கள் வழங்கல் பணிகளில் நேரடியாக ஈடுபடுவது மிகக் குறைவே , ஆனால் தீச்சுவாலைச் நடவடிக்கையின் போது சிறிலங்க வான்படை பாதைகளைத் தகர்த்தபோது தமிழீழ மக்கள் வேகவேகமாக வந்து பாதைகளைச் சீரமைத்தது மற்றும் காயமடைந்தவர்களை மீட்டது, ஒரு Total War உத்தியாகும்.

இது எப்படியானது என்றால் ஒரு தேசமே போர்க்களமாக மாறிய நிலை என்பதே பொருத்தமாகும்.

தீச்சுவாலை முறியடிப்பு நடவடிக்கை என்பது வெறும் நிலப்பரப்பைக் காப்பதற்காக பெற்ற ஒரு வெற றியென்று கூறுவதை விட அது ஒரு இராணுவப் தத்துவத்தின் வெற்றி என்று கூறுவதே பொருந்தும்.

ஒரு அரச இராணுவம் தனது தொழில்நுட்பத்தை நம்பிப் போரிட்டபோது, புலிகள் தங்களின் நிலப்பரப்பு அறிவு, தமது துல்லியமான பீரங்கிப் பயன்பாடு மற்றும் அசைக்க முடியாத மன உறுதி ஆகியவற்றை மட்டும் நம்பிப் போரிட்டனர்.

வரலாற்றின் பக்கங்களில் இந்தச்சமர் ஒரு விடுதலையாடுடிகளின் இயக்கம் எப்படி ஒரு பெரும் இராணுவத்தின் தீச்சுவாலையைத் தனது அர்ப்பணிப்புகளாலும் மனத்திட்பத்தினாலும் அணைத்தது என்பதற்கான சாட்சியாக போரியல் பாடப்புத்தகங்களில் இடம்பெறவேண்டிய ஒன்றாகும் .

உலகம் ஒரு நாள் புலிகளின் போரியலை முழுமையாகத் தேடி தன் இராணுவப்பக்கங்களில் வழிகாட்டல் குறிப்புகளாக்கும் என்பதற்கும் இந்த நடவடிக்கை ஒன்றே போதுமானது எனலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 27 April, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்