பேரரசுகளின் சதுரங்கத்தில் ஒரு தேசத்தின் தீர்க்கதரிசனம் : சுதுமலை பிரகடனம் ஒரு வரலாற்றுப் பாடம்

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Final War
By Independent Writer Aug 05, 2026 09:49 AM GMT
Report
Courtesy: பா.பிரியங்கன்

1987 ஓகஸ்ட் 4. யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் ஆலய முற்றவெளி அன்றைய நாள் ஒருவிதமான பேரமைதியும், அதைவிடக் கனமான ஒரு வரலாற்றுப் பதற்றமும் அந்த மைதானத்தைச் சூழ்ந்திருந்தன.

அதுவரை ஈழ வரலாற்றில் நிகழாத ஒரு சனக்கூட்டம் , பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் மூச்சுவிடக்கூட மறந்து திரண்டு நிற்க, அங்கிருந்த மேடையில் ஏறிய அந்த இளைஞனின் குரல் ஒரு தேசிய இனத்தின் எதிர்காலம் எந்தத் திசையில் நகரப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்த்திய தீர்க்கதரிசனத்தின் குரலாக ஒலிக்கத்தொடங்கிற்று.

"எங்கள் மக்களின் பாதுகாப்பையும், அவர்களின் இறையாண்மையையும் இந்திய அரசிடமே ஒப்படைக்கின்றோம்..." தேசிய தலைவர் அன்று ஆற்றிய இந்த சுதுமலைப் பிரகடனம், ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, உலகளாவிய விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றுப் பக்கங்களிலும் தவிர்க்க முடியாத ஒரு திருப்புமுனையாக மாறியது.

தலைவரைக் காணத் திரண்ட மக்கள் வெள்ளம்... வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…

தலைவரைக் காணத் திரண்ட மக்கள் வெள்ளம்... வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…

அரசியல் முதிர்ச்சி 

தமது ஆயுதங்களைக் கையளிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு தருணத்தில், ஒரு தேசத்தின் ஆன்மாவை எப்படித் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்திய நிகழ்வு அது.

தேசம் என்பது ஆயுதங்களிலா வாழ்கிறது? பிரெஞ்சு சிந்தனையாளர் எர்னஸ்ட் ரெனான் தேசம் என்பதைப் பற்றி வரையறுக்கும் போது, "அது வெறும் எல்லைக்கோடுகளால் வரைபடத்தில் குறிக்கப்படும் நிலமல்ல அது மனிதர்களின் கூட்டு மனசாட்சி, ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி" எனக்கூறுவார் .

அதேபோல பெனடிக்ட் ஆண்டர்சனும் தேசங்களை மனிதர்களின் "கற்பிதச் சமூகங்கள்" என்று அடையாளப்படுத்துவார். இந்த அரசியல் தத்துவங்களின் பார்வையில் சுதுமலை உரையை அணுகும்போது, தலைவர் பிரபாகரன் முன்வைத்த அந்த அரசியல் முதிர்ச்சி புலப்படும்.

இந்தியாவின் மை லாய் எனப்படும் வல்வெட்டித்துறைப் படுகொலை…

இந்தியாவின் மை லாய் எனப்படும் வல்வெட்டித்துறைப் படுகொலை…

தேச நிலையை எப்படித் தக்கவைத்துக்கொள்ள முடியும் 

 ஆயுதம் என்பது ஒரு கட்டத்தில் இலட்சியத்தை அடைவதற்கான கருவி மட்டுமே. அதை ஒப்படைப்பதால் மட்டும் போராட்டம் முடிந்துவிடுவதில்லை.

உண்மையான தேசியம் என்பது மக்களின் மனதில் வாழும் விடுதலை விருப்பத்திலும், அவர்களின் சுயநிர்ணய உரிமையிலுமே இருக்கிறது என்பதை அவர் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார்.

அரசு இல்லாத சூழலிலும் ஒரு இனம் தனது தேச நிலையை எப்படித் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு சுதுமலை பிரகடனம் ஒரு உன்னதமான சான்று ஆகும் .

வல்லரசுகளின் ஆட்டமும் சாம்ஸ்கியின் எச்சரிக்கையும் புகழ்பெற்ற அரசியல் விமர்சகர் நோஅம் சாம்ஸ்கி சர்வதேச அரசியலின் கோர முகத்தை அடிக்கடி சுட்டிக்காட்டுவது உண்டு . அதாவது "வல்லரசுகள் தங்களின் சொந்தப் பிராந்திய, பொருளாதார நலன்களுக்காகச் சிறிய இனங்களின் போராட்டங்களை எப்போதும் பகடைக்காய்களாகவே பயன்படுத்தும்."

சுதுமலைப் பிரகடனத்தில் இந்த ஆபத்தையே தலைவர் பிரபாகரன் அன்று மிக நுட்பமாகக் கோடிட்டுக் காட்டினார்.

 புவிசார் அரசியலின் சுயநலம் அன்று இந்திய அரசு தமிழர்களின் விடுதலைக்கா. ஈழ நிலத்திற்குள் வரவில்லை, மாறாகத் தனது பிராந்திய பாதுகாப்பு நலன்களுக்காகவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பதை அவர் அன்றே கணித்தார்.

இது ஒரு கசப்பான உண்மை "இந்தியாவை நான் நேசிக்கிறேன்... ஆனால் என் மக்களின் நலனே எனக்கு முதன்மையானது" என்ற அவரின் வரிகளுக்குப் பின்னால், ஒரு வல்லரசை எதிர்கொள்ளும் துணிச்சலும், வரப்போகும் நெருக்கடிகள் குறித்த தெளிவும் மிக நன்றாகவே இருந்தன.

பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா...

பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா...

வரலாற்று நெடுகிலும் ஒளிரும் தீர்க்கதரிசனம்

சுதுமலைப் பிரகடனம் என்பது அன்றைய காலத்தின் தற்காலிகப் பிரச்சினைகளுக்கான தீர்வு அல்ல. அது, அடுத்தடுத்த தசாப்தங்களில் தமிழ் இனம் எதிர்கொள்ளப் போகும் புவிசார் அரசியல் நெருக்கடிகளை முன்கூட்டியே உணர்த்திய ஒரு எச்சரிக்கை ஆவணமாகும்.

"போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது" என்ற கூற்று, பின்னாட்களில் இராணுவ ரீதியான கட்டங்களைத் தாண்டி, சர்வதேச அளவில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டமாக உருவெடுத்ததன் மூலம் உண்மை என நிரூபணமானது.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒரு தேசத்தின் விடுதலை என்பது எந்த ஒரு பேரரசின் தயவாலோ, வல்லரசுகளின் கருணையாலோ தானாகக் கிடைத்துவிடாது.

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் பா.பிரியங்கன் அவரால் எழுதப்பட்டு, 05 August, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்