தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை உரையாடலுக்கு உட்படுத்துவத வேண்டும்

By Independent Writer Apr 21, 2026 12:58 PM GMT
Report
Courtesy: சி.அ.யோதிலிங்கம்

தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை வலிமையான நிலையில் உரையாடலுக்கு உட்படுத்துவதே இன்றைய நிலையில் மிகவும் அவசியமானது என அரசியல், ஆய்வாளரும், சட்ட தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இதனை வெளியிட்டுள்ளார்.

அதன் முழு விபரமும் வருமாறு.

இம்மாதம் 10ம், 11ம் திகதிகளில் பாகிஸ்தானின் அனுசரணையில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பாகிஸ்தானில் இடம் பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு

அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு

பேச்சுவார்த்தை

இது முறிவடையும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். யுத்தம் மூலம் சாதிக்க முடியாதவற்றை பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கா அடைய முற்பட்டது. ஈரான் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அணுச் செறிவூட்டல் விவகாரமும், ஹார்மூஸ் நீரிணையில் ஈரானின் இறைமை தொடர்பான விவகாரமுமே முக்கியமாக பேச்சுவார்த்தை முறிவிற்க்கு காரணமாக அமைந்தன. ஈரான் இந்த இரண்டு விடயங்களிலும் மிகவும் இறுக்கமாக நின்று கொண்டது. ஈரான் 10 அம்சத்திட்டத்தையே முக்கியமாக முன்வைத்தது.

தாக்குதல் நடாத்தப்படாது என்பதற்கான உறுதி மொழி, ஹார்மூஸ் நீரிணையில் ஈரானின் இறைமையை அங்கீகரித்தல், யுரேணியம் செறிவூட்டும் உரிமை, பொருளாதாரத் தடை நீக்கம், பிறநாடுகளுடனான வர்த்தகத் தடை நீக்கம், ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை ரத்துச் செய்தல், அணுசக்தி முகாமையின் தீர்மானங்களை ரத்து செய்தல், போர் இழப்பீடு , அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிலிருந்து விலகல், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் என்பனவே அப் பத்து அம்சத்திட்டத்தில் அடங்கியிருந்தன .

போரை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது எனத் தெரியாத நிலையிலேயே அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வந்தது. போரை நிறுத்தா விடில் உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சர்வதேச அழுத்தங்கள் அமெரிக்காவுக்கு அதிகரித்திருந்தன. இதனால் ஏதோ ஒரு வகையில் போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. ஆனாலும் அமெரிக்காவின் தலைக்கனம் இறங்கி வருவதற்கு அனுமதிக்கவில்லை.

எனினும் அமெரிக்காவின் வீரப் பேச்சுக்கள் தற்போது குறைந்துள்ளன. இதனால் இனிவரும் காலங்களில் போர் இடம் பெற்றாலும் மிதமான போராக இருக்குமே தவிர கடுமையான போராக இருக்க மாட்டாது.

போர் நிறுத்தம் வந்தாலென்ன? மிதமான போர் தொடர்ந்தால் என்ன ஈரானுக்கு இது வெற்றி தான். ஈரானின் வெற்றிக்கு பல காரணிகள் பங்களித்திருக்கின்றன. அதில் முதலாவது ஹார்மூஸ் நீரிணையை மூடியதன் மூலம் போருக்குள் உலகப் பொருளாதாரத்தை இழுத்து விட்டமையாகும்.

சுமார் 20 வீதமான எரிபொருட்கள் இப்பாதையினூடு செல்வதே வழமையானதாகும். நீரிணை மூடப்பட்டதால் எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்ததோடு எரிபொருளின் தட்டுப்பாட்டையும் உருவாக்கி இருந்தது.

உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…

உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…

செங்கடல் பாதை

மறுபக்கத்தில் செங்கடல் பாதைக்கும் ஹவூதி கிளர்ச்சிக்காரர்கள் அச்சுறுத்தலாக இருந்தனர். குறிப்பாக அமெரிக்காவுக்கு சார்பான மத்திய கிழக்கு நாடுகள் வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இரண்டாவது ஈரானின் மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களாகும். இத்தாக்குதல்கள் போரை பிராந்திய போராக மாற்றின. இதனால் முழு மத்திய கிழக்குப் பிராந்தியமும் அமைதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

அமெரிக்கத்தளங்கள் உள்ள அனைத்து நாடுகளும் பலத்த சேதங்களுக்கு உட்பட்டன. ஒரே நேரத்தில் ஈரானால் ஆளில்லா விமான தாக்குதல்களும், ஏவுகணைத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.

அந்நாடுகளின் வான் பாதுகாப்பு கவசங்களினால் நின்று பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. விமான நிலையங்கள், எரிபொருள் உற்பத்தி நிலையங்கள், படைத்தளங்கள், என்பன கடும் சேதத்திற்கு உள்ளாகின.

ஈரானின் ஆளில்லா விமானங்களினதும், ஏவுகணைகளதும் உற்பத்தி செலவுளோடு ஒப்பிடும் போது வான் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகமாக இருந்தன. இது அந்நாடுகளிற்கு போரின் செலவினத்தையும் அதிகரித்தது.

ஒரு பக்கத்தில் ஹார்மூஸ் நீரிணை மூடல் வருமானத்தை தடுக்க மறுபக்கத்தில் ஆளில்லா விமானங்களும், ஏவுகணைகளும் செலவினத்தை அதிகரித்தன. அமெரிக்காவினாலும் அந்நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை. இது அமெரிக்கா தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையையும் இழக்கச் செய்து அமரிக்கா அந்நாடுகள் கட்டி வைத்த பிரமையும் செயலிழக்கச் செய்தது.

இதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கட்டார் , அமெரிக்க படைத்தளங்ளையே தன்நாட்டிலிருந்து அகற்றியது. மூன்றாவது நேட்டோ அமைப்பு போரில் பங்கு பற்ற மறுத்தமையாகும்.

இதுவரை காலமும் அமெரிக்கா போரினை நேட்டோ மூலம் அல்லது ஐக்கிய நாடுகள் சபை மூலமே நடாத்தியிருந்தது. இது போருக்கு ஒரு உலக அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது. இந்தப் பலத்தின் மூலம் தான் அமெரிக்காவினால் ஒரு துருவ உலக ஒழுங்கையும், வலிமையான நிலையில் பாதுகாக்க முடிந்தது.

எப்போ அமெரிக்கா “அமெரிக்கா முதலில்” என்ற கோசத்தை முன்னெடுத்ததோ அன்றே அதன் ஒரு துருவ உலக ஒழுங்கும் பலவீனமடையத் தொடங்கியது. தந்தையிடம் குடும்ப அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக தந்தை குடும்ப அங்கத்தவர்களை புறக்கணித்து தன்னிச்சையாக செயற்பட முடியாது. ஒரு துருவ உலக ஒழுங்கிலும் அமெரிக்காவின் நிலை இந்த ஒழுக்க விதிகளின் மேல்தான் நிலைத்திருந்தது.

[https://ibctamil.com/article/a9-road-reopening-2002-ltte-administration-history-

அமெரிக்காவின் நிலை

அந்த ஒழுக்க விதிகள் சீர்குலைய அமெரிக்காவின் நிலையும் கீழிறங்கியது. இறுதியில் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் நேட்டோ நாடுகளை கோழைகள் என புலம்பியதை தான் கேட்க முடிந்தது. நான்காவது அமெரிக்காவில் உருவாகிய உள்நாட்டு எதிர்ப்பாகும். அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்ளை நடாத்தத் தொடங்கினர் “அரசர்கள் வேண்டாம்” போர் வேண்டாம்” என்ற கோசங்கள் அமெரிக்கா முழுவதிலும் எதிரொலிக்கத் தொடங்கின.

போருக்காக அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாவதை அமெரிக்க மக்கள் ஏற்கவில்லை. தவிர அமெரிக்க ஜனாதிபதி போரினை அமெரிக்க சட்டதிட்டங்கிளின்படியும் மேற்கொள்ளவில்லை.

வேறு ஒரு நாட்டுடன் போர் தொடுப்பதாயின் அமெரிக்க காங்கிரசின் அனுமதியை ஜனாதிபதி பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த அனுமதி எதுவும் பெறப்படாமலே டிரம்ப் போரினைத் தொடங்கினார். ஏற்கனவே அமெரிக்காவிற்கு 38 ரில்லியன் வரை கடன் இருக்கின்றது. இக்கடன் சுமை இருக்கத்தக்கதாகவே இன்னோர் சுமையினை உருவாக்க அமெரிக்க மக்கள் விரும்பவில்லை.

ஐந்தாவது சர்வதேச ஆதரவு ஈரானுக்கு இருந்தமையாகும். சர்வதேச ரீதியாக நாடுகள் அநீதியான போர் என்றே இப்போரினை கருதின. சர்வதேச மக்களிடமும் இக்கருத்து மேலாங்கியிருந்தது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நாடுகள் எவையும் போருக்கு ஆதரவாக இருக்கவில்லை.

நேரடி நலன்சார் நாடுகள் மட்டுமே ஆதரவாக இருந்தன. உலகெங்கும் மக்கள் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தனர். பாப்பரசர் கூட அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்திருந்தார். மொத்தத்தில் உலகத் தார்மீக ஆதரவு ஈரான் பக்கமே இருந்தது. போர் அனைத்து நாடுகளிலும் பொருளாதார நெருக்கடியை தூண்டிய போது மக்களின் தார்மீக கோபம் அமெரிக்காவுக்கு எதிராக பாயத் தொடங்கியது. ஆறாவது ஈரான் சார்பு கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதல்களாகும்.

ஹிஸ்புல்லா, ஹமாஸ் , ஹவூதி , கிளர்ச்சிக்குழுக்களோடு ஈராக்கில் செயற்பட்ட ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களும், ஈரானுக்கு ஆதரவாக தாக்குதல்களை நடாத்தின. இத்தாக்குதல்கள் பல்பக்க அழுத்தங்களை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்தன.

வெட்ட வெட்ட தளைப்பது போல கிளர்ச்சிக்குழக்களும் வளர்ந்து கொண்டே சென்றன. அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் அழிப்பு நடவடிக்கைகளால் கிளர்ச்சிக்குழுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. ஒரு வகையில் இஸ்ரேலை சுற்றி வளைப்பது போல இத்தாக்குதல்கள் இடம் பெற்றன. ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவும், ஹவூதி கிளர்ச்சிக் குழுவும், தாக்குதல் உத்தியில் வலுவானதாக இருந்தன. ஏழாவது ஈரானின் புவியியல் அமைப்பாகும் மலைகள் சூழ்ந்த புவியியல் அமைப்பு போரில் ஈரானுக்கு சாதகமாக இருந்தது.

அது தனது ஏவுகணைகளையும் ஏனைய ஆயுதங்களையும் மலைகளின் அடி ஆழத்தில் பாதுகாப்பாக வைக்கமுடிந்தது. அமெரிக்கா தரைப்போரை ஆரம்பிக்காமைக்கு பிரதான காரணம் மலைகள் சூழ்ந்த ஈரானின் புவியியல் அமைப்புத்தான். ஆயிரக்கணக்கான படை வீரர்கள் மறைந்திருந்து தாக்குதல் நடாத்தக்கூடிய வலிமையை இந்தப் புவியியல் அமைப்பு கொடுத்தது.

மணல் புழுதியை அள்ளிக்கொட்டும் பாலைவனங்களும் இருந்தன. எட்டாவது ஈரான் மக்களின் அளவு கடந்த தேசிய உணர்வாகும். அமெரிக்கா முதலில் உள்நாட்டுக் கிளர்ச்சியை உருவாக்கி தங்களுக்கு சார்பான ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வரலாம் என கனவுகண்டிருந்தது.

கிளர்சிக்குழுக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்ய முயற்சித்தது. ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. கிளர்ச்சி செய்தவர்களும் அடக்கப்பட்டனர். தாக்குதல் தொடர தொடர ஈரான் மக்களின் தேசிய உணர்வு வளர்ந்தமை அரசிற்கு சாதகமாக மாறியது. 7 மில்லியன் மக்கள் இராணுவத்தில் சேர்வதற்கு தயாராக இருந்தனர்.

ட்ரம்ப் ஈரான் நாகரீகங்களை அழிப்பேன் என கர்சித்த போது கோடிக்கணக்கான மக்கள் தமது உயிரையும் துச்சமென மதித்து மின் நிலையங்களையும், பொது நிறுவனங்களையும், சுற்றி அணியாக மனிதச்சங்கிலிப் போராட்டத்தை நடாத்தினர். ஓன்பதாவது சீனா, ரஸ்யா என்ற இரு வல்லரசுகளின் ஆதரவு ஈரானுக்கு இருந்தமையாகும். ஆயுத, உளவுத்தகவல், உதவிகள் வழங்கியதோடு ஜ.நா பாதுகாப்புச் சபையிலும் ஈரானுக்கு அரனாக நின்றன.

ஜ.நாவின் அங்கீகாரம்

பாதுகாப்புச்சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போது இரட்டை வீட்டோவைப் பயன்படுத்தி இரு நாடுகளும் தீர்மானத்தினை தடுத்தன. இதனால் போருக்கு ஜ.நாவின் அங்கீகாரத்தைப் பெற அமெரிக்காவினால் முடியவில்லை. ஈரான் மக்கள் உணவுப் பொருட்களுக்கு சிரமப்பட்டபோது ரஸ்யா கப்பல் மூலம் உணவுப் பொருட்களினையும் ஈரானுக்கு அனுப்பி வைத்தது.

ஈரான் பயன்படுத்தும் வான் தடுப்புக் கவசம் சீனாவால் வழங்கப்பட்டது என்றே கூறப்படுகின்றது. தாக்குதல் இலக்கு தொடர்பான துல்லியமான தகவல்களையும் இவ்விரு நாடுகளுமே வழங்கின என்றும் செய்திகள் வருகின்றன.

இவ்விரு நாடுகளையும் பொறுத்தவரை இப்போர் அவற்றிற்கும் வாழ்வா? சாவா? பிரச்சினைதான். இதனால் ஈரான் பக்கம் நிற்பதைத் தவிர அவற்றிற்கு வேறு தெரிவு இருக்கவில்லை.

பத்தாவது ஈரான் தனது படைக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்திவைத்திருக்கும் முறைமையாகும். கடந்தகால மத்திய கிழக்கு போர்களின் அனுபவங்களைக் கொண்டே ஈரான் இந்த ஒழுங்கமைப்பை மேற்கொண்டுள்ளது.

சிரியா, ஈராக், லிபியா என்பவற்றின் மீதான அமெரிக்காவின் போர் வலிமையான அனுபவங்களை பெற்றுக்கொடுத்தது. அந்த அனுபவங்களைக் கொண்டே தனக்கேயுரிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

அதில் ஒன்று பல்லடுக்குத் தலைமைத்துவம். தளபதி ஒருவர் மரணமானால் உடனடியாக அடுத்த தளபதி பொறுப்பேற்று விடுவார். இவ்வாறு ஐந்தடுக்கில் அந்தத் தலைமைத்துவம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அமெரிக்கா தலைவரை அழித்துவிட்டால் அரசாங்கம் விழுந்துவிடும் என்றே கருதியிருந்தது. அது அமெரிக்காவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இரண்டாவது தலைமைத்துவத்தை பரவலாக்கம் செய்வதாகும்.

ஈரான் 38 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் சுயாதீன தலைமைப் பொறுப்பும், சுயாதீன அதிகாரமும், கொடுக்கப்பட்டது. ஆயுத உற்பத்திகளையும் அவை சுயாதீனமாக தாங்களே மேற்கொண்டன.

எனவே ஒரு மாகாணம் பின்னடைவுக்கு வந்தாலும் மற்றைய மாகாணம் போரை நடாத்திக் கொண்டிருக்கும். இந்தப் பரவலாக்கல் அமெரிக்கா போரில் வெல்ல முடியாத நிலையை உருவாக்கியது.

இந்தப் போர் உலகளவில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கியுள்ளது. இது ஒரு துருவ உலக ஒழுங்கின் வீழ்ச்சியையும், பல்துருவ உலக ஒழுங்கின் ஆரம்பத்தையும் காட்டி நிற்கின்றது.

வரும் காலங்களில் பல்வேறு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் பல்துருவ உலக ஒழுங்கு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பல்துருவ உலக ஒழுங்கில் சீனா, ரஸ்யா, ஈரான், இந்தியா போன்ற நாடுகள் முக்கியத்துவம் பெறும் நிலையும் உருவாகலாம். பல்துருவ உலக ஒழுங்கு இருப்பதனால் எதிர்காலத்தில் வலிமையான ஐக்கியநாடுகள் சபையினையும் உருவாக்கக் கூடிய நிலை ஏற்படும். ஈரான் மீதான போர் தமிழ்த்தரப்பிற்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்திருக்கினறது.

ஈரான் மக்களின் வலிமையான தேசிய உணர்வு, புவிசார் அரசியலைக் கையாளும் திறன், பல் அதிகார மைய உருவாக்கம் சர்வதேச ஆதரவுத்தளத்தைக் கட்டியெழுப்புதல், சேமிப்புச் சக்திகளை பலப்படுத்துதல், எதிரிக்கு உள்நாட்டில் நெருக்கடியை உருவாக்குதல், பேச்சுவார்த்தை செயற்பாட்டை பேச்சுவார்த்தைக்குழு ஆலோசனைக்குழு என்பவற்றின் மூலம் செயற்படுத்துதல் போன்ற விடயங்களின் ஊடாக நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது.

தமிழ்த்தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை வலிமையான நிலையில் உரையாடலுக்கு உட்படுத்துதல் இன்றைய நிலையில் மிகவும் அவசியமானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்