இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவரின் இழிசெயல்!
நாரஹேன்பிட்டியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண்களை ரகசியமாகப் படம்பிடித்த குற்றச்சாட்டின் கீழ், இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியில் தங்கியிருந்து மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட பெண் மருத்துவர்கள் சிலர், தாங்கள் குளிப்பதைப் பிரதிவாதிகள் தங்களது கைபேசிகள் மூலம் ரகசியமாகப் படம்பிடித்ததாக மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் அதே இடத்தில் தங்கியிருந்த ஆண்களையும் ரகசியமாகப் படம்பிடித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிப்பதுடன், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், தலா 5 இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |