மாயமான 2.5 மில்லியன் திறைசேரி பணம்! நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள அநுர
வெளிநாட்டுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும, பொது நிதிக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷா டி சில்வாவிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அளிப்பதற்காக இன்று (30) பொது நிதிக் குழுவின் முன் முன்னிலையாகுமாறு திறைசேரியன் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
பொது நிதிக் குழு
இருப்பினும், திறைசேரி செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும, பொது நிதிக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷா டி சில்வாவுக்கு, தாம் இன்று குழுவின் முன் முன்னிலையாக முடியாது என ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இவ்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிடவிருப்பதால், தாம் பொது நிதி மீதான குழுவின் முன்பாக ஆஜராகப் போவதில்லை என ஹர்ஷனா சூரியப்பெரும சம்பந்தப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |