பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா...

Sri Lanka Easter Attack Sri Lanka Pujith Jayasundara Hemasiri Fernando
By Independent Writer Aug 01, 2026 09:33 AM GMT
Report
Courtesy: பா.பிரியங்கன்

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும், அதனால் உண்டான வடுவும் ஆறாத்துயரமும் இலங்கை மக்களின் நெஞ்சை விட்டு அகலவில்லை.

சுமார் 270க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட அந்தப் பேரவலத்தின் தொடர்ச்சியாக, அண்மையில் கொழும்பு மூவரடங்கிய நிரந்தர மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இலங்கை அரசியலிலும் நீதித்துறை பரப்பிலும் இப்போது மீண்டும் ஒரு விவாதப் புயலைக் கிளப்பியிருக்கிறது.

சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா... | Pujith Jayasundara And Hemasiri Sentenced To Death

அதாவது வெளிநாட்டு உளவுத்துறை மூலம் துல்லியமான எச்சரிக்கை கிடைத்தும், அதைக் கண்டுகொள்ளாமல் கடமை தவறினார்கள் என்பதே இவர்கள் மீதான பிரதானமான குற்றச்சாட்டு ஆகும்.

ஒரு நாட்டின் உயர்மட்டப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக மேலோட்டமாகத் தோன்றலாம்.

ஆனால், உண்மையில் சிறிலங்காவின் சட்டக் கட்டமைப்பு, வரலாற்று அனுபவங்கள் மற்றும் அதிகார மையங்களின் நகர்வுகளை உற்றுநோக்கும் எவருக்கும் ஒரு கேள்வி எழாமல் இல்லை.

அதாவது "இந்த மரண தண்டனை உண்மையில் நிறைவேற்றப்படுமா? அல்லது ஏதோ ஒரு சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புப் படிவத்தில் கையெழுத்தாகி இவர்கள் அமைதியாக வெளியேறுவார்களா?"

ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...!

ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...!

சட்டப் புத்தகத்தில் மரண தண்டனை ஆனால் நடைமுறையில் ஆயுள் தண்டனை

சிறிலங்காவின் குற்றவியல் சட்டப் புத்தகத்தில் மரண தண்டனை இன்றும் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால் 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் எந்தவொரு கைதிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா... | Pujith Jayasundara And Hemasiri Sentenced To Death

சட்டத்தால் அறிவிக்கப்படும் மரண தண்டனைகள் அனைத்துமே நடைமுறையில் ஆயுள் தண்டனையாகவே மாற்றப்படுகின்றன. அப்படியிருக்க, பூஜிதவிற்கும் ஹேமசிறிக்கும் வழங்கப்பட்ட இந்த மரண தண்டனைத் தீர்ப்பு என்பது, பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களின் மற்றும் பொதுமக்களின் கொந்தளிப்பைத் தணிப்பதற்காக வீசப்பட்ட ஒரு சட்டரீதியான "தற்காலிக வடிகால்" என்றே கருத வேண்டி இருக்கிறது.

அரசியலமைப்பு பிரிவு 34 - திறந்தே இருக்கும் பின்னடைவுக் கதவுகள்

சிறிலங்கா அரசியலமைப்பின் 34ஆம் சரத்து, நாட்டின் ஜனாதிபதிக்கு அபரிமிதமான அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு கைதியின் தண்டனையைக் குறைப்பதற்கோ, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ அல்லது முற்றிலும் இரத்து செய்து "ஜனாதிபதி பொதுமன்னிப்பு" வழங்கி விடுவிப்பதற்கோ ஜனாதிபதிக்கு முழு உரிமை உண்டு.

அப்படியாக இலங்கை வரலாற்றில் சுதந்திர தினம் மற்றும் புனித வெசாக் பண்டிகைகளின் போது கைதிகள் விடுவிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான்.

பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா... | Pujith Jayasundara And Hemasiri Sentenced To Death

இங்கும் அரசியல் சூறாவளிகள் தணிந்து, மக்களின் நினைவலைகளில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கொந்தளிப்புகள் மெல்ல மெல்ல மறையும் போது, மேல்முறையீட்டு வழக்குகளின் போக்கிலோ அல்லது பின்னணியில் நடக்கும் அரசியல் காய்நகர்த்தல்களிலோ இவர்களுக்கான மன்னிப்பு வாசல்கள் திறக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

உண்மையில் சிறைச்சாலை மருத்துவமனைகளில் காலத்தைக் கழிப்பதும், பின்னர் அமைதியாக விடுதலையாவதும் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்குப் புதிய விடயமல்ல.

மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்

மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்

சமாந்தரமற்ற நீதிமுறைமை தமிழ் மக்களுக்கான தராசு வேறுதானா?

அதிலும் நேற்றைய இந்தத் தீர்ப்பை அணுகும் போது, இலங்கையின் நீதித்துறையில் நீண்டகாலமாகக் காணப்படும் "சமாந்தரமற்ற நீதிமுறைமை" குறித்துப் பேசாமல் கடந்து செல்ல முடியாது.

பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா... | Pujith Jayasundara And Hemasiri Sentenced To Death

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் இனமும் அதிகார பலமுமே இங்கு நீதியின் வேகத்தைத் தீர்மானிக்கின்றனவா என்ற ஐயம் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் வலுத்து வருகிறது.

செம்மணி முதல் ஏனைய மனிதப் புதைகுழிகள் வரை

1990களில் யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற கொடூரங்கள் மற்றும் போர்க்கால மனித உரிமை மீறல்களில் குற்றஞ்சாட்டப்பட்ட உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதியான தண்டனைகளும் வழங்கப்படவில்லை.

பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா... | Pujith Jayasundara And Hemasiri Sentenced To Death

மாறாக, அவர்களில் பலர் பதவி உயர்வுகளையும், தூதரகப் பொறுப்புகளையும், அரசு கௌரவங்களையுமே பரிசாகப் பெற்றனர்.

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சாலே விவகாரம்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த பிள்ளையான் பிணையில் விடுவிக்கப்பட்ட கையோடு இராஜாங்க அமைச்சராக ஆக்கப்பட்டார்.

பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா... | Pujith Jayasundara And Hemasiri Sentenced To Death

அதேபோல ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சர்வதேச ஊடகங்களால் (Channel 4 உட்பட) கைநீட்டப்பட்ட முன்னாள் புலனாய்வுத் துறை பிரதானி சுரேஷ் சாலே மீதான விசாரணைகள் எந்த மட்டத்தில் முடங்கிக் கிடக்கின்றன என்பது நாட்டிற்கே வெளிச்சம்.

ஆகவேதான் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களாக இருக்கும் போது தசாப்த கணக்கில் இழுத்தடிக்கப்படும் விசாரணைகளும், மூடிமறைக்கப்படும் குற்றங்களும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையான சமூகம் சார்ந்த மக்களாக இருக்கும் போது விரைந்து அளிக்கப்படும் தீர்ப்புகளும் இலங்கையின் "இரட்டை நீதித் தராசை" தோலுரித்துக் காட்டுகின்றன.

'சூத்திரதாரி' யார்?

உணமையில் பூஜித ஜெயசுந்தரவையும் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தண்டனைக்கூண்டில் ஏற்றுவதுடன் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு முடிந்துவிடப்போவதில்லை. அவர்கள் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய "கடைநிலை பலியாடுகள்" மட்டுமேயாம்.

பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா... | Pujith Jayasundara And Hemasiri Sentenced To Death

ஆனால், இந்தக் கொடூரத் தாக்குதலைப் பின்னணியில் இருந்து திட்டமிட்டது யார்? இதன் மூலம் அரசியல் இலாபம் அடைந்த "மகா மூளை" யார்? என்ற கேள்விகள் இன்னமும் பலரிடம் இருக்கத்தான் செய்கின்றன.

சுருக்கமாகச் கூறினால், தற்போதைய மரண தண்டனைத் தீர்ப்பு என்பது அமைதியின்றித் தவிக்கும் மக்களுக்குக் காட்டப்பட்ட ஒரு தற்காலிகச் சமாதானக் கொடிமட்டுமே.

நாளையே ஒரு ஆட்சி மாற்றமோ அல்லது அரசியல் சமரசங்களோ ஏற்படும் போது, "சுதந்திர தினப் பரிசாக" இவர்களது தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை சாத்தியமானால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016