இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹமாஸின் முக்கிய தளபதி

By Dharu Sep 16, 2026 08:29 PM GMT
Report

2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்று, பீரங்கி படையினரை கடத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த வாரம் தெற்கு காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஜிஹாத் சமீஹ் மஹ்மூத் இஸ்மாயில் என்பவரே கொல்லப்பட்டதாக IDF கூறியுள்ளது.

கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சி

கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சி

 இஸ்ரேல் இராணுவம் 

அவர் ஹமாஸின் நுக்பா (Nukhba) சிறப்புப் படையில் குழுத் தளபதியாக செயல்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அடையாளம் கண்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹமாஸின் முக்கிய தளபதி | Hamas Commander Killed In Khan Younis

2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய இஸ்மாயில், நிரிம் சமூகத்திற்கு அருகே எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஒரு பீரங்கி படைக் குழுவுடன் நடைபெற்ற மோதலில் பங்கேற்றதாக IDF தெரிவித்துள்ளது.

அந்த படைக் குழுவில், தளபதி ஓமர் மாக்சிம் நியூட்ரா, (21), தளபதி சார்ஜென்ட் ஷகெட் டஹான், (19), ஓட்டுநர் சார்ஜென்ட் நிம்ரோட் கோஹென், (19), துப்பாக்கி இயக்குநர் சார்ஜென்ட் ஓஸ் டேனியல், ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.

நியூட்ரா மற்றும் டேனியலின் உடல்களை கடத்திச் சென்றதிலும், கோஹெனை உயிருடன் காசாவுக்கு கடத்திச் சென்றதிலும் இஸ்மாயில் பங்கேற்றதாக IDF கூறுகிறது.

மக்கா புனிதத் தலத்தின் மீது ஹவுதிக்கள் ட்ரோன் தாக்குதல்

மக்கா புனிதத் தலத்தின் மீது ஹவுதிக்கள் ட்ரோன் தாக்குதல்

 இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்

டஹான் அந்த மோதலில் கொல்லப்பட்டதுடன், அவரது உடலும் தனியாக காசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்படி போரின்போது, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதில் இஸ்மாயில் ஈடுபட்டதாக IDF தெரிவித்துள்ளது.

சமீபத்தில், போர் நிறுத்தத்தை “முறையாக மீறும் வகையில்” இஸ்ரேல் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுப்பதில் அவர் ஈடுபட்டதாகவும், அவர் ஏற்படுத்திய அச்சுறுத்தலை அகற்றுவதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் IDF தெரிவித்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016