இலங்கையில் இடம்பெறும் அநீதியின் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Jaffna Tamil
By Theepan Sep 16, 2026 11:23 PM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், தமது பிள்ளைகளைத் தேடி பல ஆண்டுகளாகப் போராடி வரும் தமிழ் தாய்மார்களின் குரலை சர்வதேச அளவில் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதிநிதிகள்,

ஈரானின் தாக்குதல்களால் போர்க்களம் போல் காட்சியளிக்கும் அமெரிக்க படைத்தளங்கள்

ஈரானின் தாக்குதல்களால் போர்க்களம் போல் காட்சியளிக்கும் அமெரிக்க படைத்தளங்கள்

துணை ஆயுதக் குழு

இறுதிப் போரின்போதும், அதற்கு முன்னரும் பின்னரும் தமது பிள்ளைகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையிலும், இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்..

இலங்கையில் இடம்பெறும் அநீதியின் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் | Injustice In Sri Lanka

தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நாள் முதல் அவர்களைத் தேடி வீதிகளில் போராடிய தமிழ் தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தை உருவாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

2017ஆம் ஆண்டு முதல் வடக்கு - கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

ஈரானின் தாக்குதல்களால் போர்க்களம் போல் காட்சியளிக்கும் அமெரிக்க படைத்தளங்கள்

ஈரானின் தாக்குதல்களால் போர்க்களம் போல் காட்சியளிக்கும் அமெரிக்க படைத்தளங்கள்

எங்கே தமது பிள்ளைகள்

இந்தப் போராட்டங்களின் மூலம், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே உள்ளனர்? கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை தமக்கு இல்லை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016