சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி...! எதிர்பார்ப்புகளை அதிகரித்த உள்நாட்டுச் சந்தை விலை
Gold Price in Sri Lanka
Sri Lanka
Today Gold Price
Gold
By Pavi
சர்வதேச சந்தையில் இன்று (18) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, வெள்ளியின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,790 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 46 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தை விலை
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றங்கள் இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நாட்டில் தங்கத்தின் விலையும் ரூ. 3,000 குறைந்துள்ளது.
அதன்படி, ஒரு பவுண்டு 22 காரட் தங்கத்தின் விலை இன்று (18) ரூ. 326,600 ஆகவும், நேற்று ரூ. 329,400 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், ஒரு பவுண்ட் 24 காரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 355,000 ஆகக் குறைந்துள்ளது, நேற்று அதன் விலை ரூ. 358,000 ஆகப் பதிவானது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |