ஜோன்ஸ்டனுக்கு எதிரான திரையரங்க ஆசன கொள்வனவு நட்ட வழக்கு: பெப்ரவரியில் விசாரணை
ஜோன்ஸ்டன பெர்ணான்டோவுக்கு எதிரான பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கலையரங்கிற்கான ஆசனங்களைக் கொள்வனவு செய்ததில் அரசாங்கத்துக்கு ஏற்படுத்திய நட்டம் தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த கொள்வனவு மூலம் அரசாங்கத்துக்கு 79 இலட்சம் ரூபாய்க்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளரான படபெந்திகே ஹேமந்த லலித் டி சில்வா ஆகிய இருவருக்கு எதிரான வழக்கையே மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனத்திடம் கொள்வனவு
குறித்த கலையரங்கிற்கான ஆசனங்களைக் கொள்வனவு செய்யும்போது, குறைந்த விலையை முன்வைத்த நிறுவனத்திடமிருந்து அவற்றைக் கொள்வனவு செய்யாமல், மற்றுமொரு தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |