மயானத்தில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள்:சுற்றிவளைப்பில் மீட்பு
Sri Lanka Police
Galle
Drugs
By Sindu
அம்பலாங்கொடை, கந்தேகொட பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் 400 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளைப் காவல் விசேட அதிரடிப்படையின் மாத்தறை முகாம் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் மீட்டுள்ளனர்.
நேற்று (17) காலை காவல் விசேட அதிரடிப்படையின் மாத்தறை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
குறித்த போதைப்பொருள் மேலதிக நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கண்டறிந்து கைது செய்வதற்காக அம்பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |