அமெரிக்கா மீது கதிரியக்க தாக்குதல் முயற்சி: ஈரான் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை இலக்கு வைத்து, “so-called dirty bomb” என்ற இரசாயன கதிரியக்கக் குண்டை அந்நாட்டுக்குள் பயன்படுத்த ஈரான் தாயராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட செய்தியில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சதித்திட்டத்தை செயல்படுத்த ஈரான் முயற்சிக்குமாஎன்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விவாதித்து வருவதாகவும் கூறப்பகிறது.
அமெரிக்காவின் அவசரகாலத் திட்டம்
சமீபத்திய உளவுத் தகவல்களை அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஈரானின் திட்டமிடலை, தற்போதைக்கு ஒரு உடனடித் தாக்குதலின் அறிகுறியாகக் கருதாமல், தனக்குத்தானே சில வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் ஒரு முயற்சி என்றே விவரித்துள்ளன.

மேலும் இது, அமெரிக்காவின் அவசரகாலத் திட்டமிடல்களில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லாரன் பிஸ், "அமெரிக்கா அனைத்து விதமான சாத்தியமான அச்சுறுத்தல்களையும் கண்காணித்து வருகிறது, ஆனால் தற்போதைக்கு நம் நாட்டிற்கு நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை" என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |