தொல். திருமாவளவன் விடுதலைப்புலிகளின் தலைவரின் இல்லம் அமைந்திருந்த பகுதிக்கு விஜயம்
மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக தொல். திருமாவளவன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை வந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை பார்வையிட்டார்.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி வெறும் காணியாகவே காணப்படுகிறது.
செம்மணி படுகொலை
குறித்த பகுதியில் தான் புலிகளின் தலைவரின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் கேக் வெட்டி பிறந்த தினத்தினை கொண்டாடுவது பழக்கமாகும்.

இதேவேளை யாழ்ப்பாணம் - செம்மணி படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அணையாவிளக்கு நினைவுத்தூபியில் நேற்று (16) மாலை இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |