செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மாபெரும் போராட்டம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (17) காலை 10 மணியளவில் செம்மணிச் சந்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை எதிர்த்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
சர்வதேச விசாரணை
இதன்போது அரியாலை தபால் கட்டை சந்தியிலிருந்து, செம்மணி புதைகுழி வரையும் நடை பவனியும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி மனிதப் புதைகுழியின் இடைக்கால அறிக்கை...! முற்றாக நிராகரிக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |