வெளிநாடொன்றில் பதிவான பயங்கர துப்பாக்கி சூடு...! சுமார் 17 பேர் பலி - அதிகரிக்கும் பதற்றம்
தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 530 கிலோமீட்டர் இடைவெளியில் உள்ள இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் நள்ளிரவு வேளையில் அடுத்தடுத்து இச்சம்பவங்கள் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்கான நோக்கம்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குவாசுலு-நடால் (KwaZulu-Natal) மாகாணத்தின் பீட்டர்மரிட்ஸ்பர்க் (Pietermaritzburg) நகருக்கு வெளியே உள்ள ஸ்வீட்வாட்டர்ஸ் (Sweetwaters) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுத் துளைகள் நிறைந்த வாகனத்திற்குள் எட்டு ஆண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளில் குடும்பத்தினர் உதவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் அடையாளம் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே தாக்குதலுக்கான நோக்கம் தெரியவரும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கத் தலைநகர்
இச்சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கத் தலைநகர் பிரிட்டோரியாவின் (Pretoria) அட்டரிட்ஜ்வில் (Atteridgeville) பகுதியில் உள்ள ஜெஃப்ஸ்வில் (Jeffsville) என்ற குடிசைப் பகுதியில் நான்கு அறைகள் கொண்ட தற்காலிக வீட்டிற்குள் ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

நள்ளிரவுக்குச் சற்று முன்பு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் உறவினர் ஒருவரைத் தேடி வீட்டிற்குள் சென்ற சிறுவன் ஒருவனே இச்சடலங்களை முதலில் பார்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அங்கு பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையிவல் அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |