சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு சிவப்பு, மஞ்சள் கொடி போர்த்தி அஞ்சலி!
புதிய இணைப்பு
மறைந்த தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான M.K. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு சிவப்பு, மஞ்சள் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்.
இரண்டாம் இணைப்பு
வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரான மறைந்த M.K. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று (16) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகளில் அரசியல் பிரமுகர்கள், கட்சிப் பிரதி நிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.
சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி வல்வெட்டித்துறையில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான M.K. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று (16-11-2026) இடம்பெறவுள்ளது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் காலை 10.00 மணிக்கு அவர் வசித்து வந்த வல்வெட்டித்துறை, நெடியகாடு, கல்றோட் வீதியிலுள்ள இல்லத்தில் நடைபெறும்.
இதையடுத்து, நண்பகல் 12.00 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகளும் இடம்பெறும்.
பின்னர், அன்னாரின் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
அன்னாரின் பூதவுடல் தற்போது வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |