சூட்சுமமாக கடத்தப்பட்ட இலட்சம் பெறுமதியான போதைப் பொருள்: பெண் கைது
15 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான போதைப் பொருட்தொகுதியுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையொன்றில் பொதி செய்து இப்போதை பொருள் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மொனராகலை காவல் பிரிவுக்குட்பட்ட துட்டகைமுனு வீதிப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக மொனராகலை கொட்டாவ ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்தச் சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பின்பு காவல்துறையினர், குறித்த வீட்டைப் பரிசோதனை செய்தபோது அங்கு பயணப் பையொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்டிருந்த 150 கிராம் குஷ் (Kush) போதைப்பொருள், 100 கிராம் ஹஷிஸ் (Hashish) போதைப்பொருள் மற்றும் 40 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
போதைப்பொருட் தொகுதி
இந்தப் போதைப்பொருட் தொகுதியின் பெறுமதி 15 இலட்சம் ரூபாவை விடவும் அதிகம் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வர்த்தகம் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்ததா என்பது தொடர்பிலும் போதைப்பொருள் வர்த்தகத்திற்குப் பின்னால் உள்ள பிரதான வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்காகவும் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சுற்றுவளைப்பின்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் இன்று (16-11-2026) மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |