தனது கொள்கையில் நீர்த்துப்போகாதவர் அண்ணன் சிவாஜிலிங்கம் : திருமாவளவன் நேரில் அஞ்சலி
மறைந்த சிவாஜிலிங்கம் தனது கொள்கையில் ஒருபோதும் நீர்த்துப் போனதில்லை, சமரசம் செய்து கொண்டதில்லை, எந்தக் காரணத்திற்காகவும் அவர் பின்வாங்கியதில்லை எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு இன்று (16) யாழ்ப்பாணத்தில் நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிவாஜிலிங்கம் எனக்கு பழக்கமானவர். டெல்லியில் இருந்தபோது அவரின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
கருத்தியல்சார் ஆளுமை
போராட்டத்தை நீர்த்துப் போகாமல் பாதுகாக்கின்ற வலிமை, காலச் சூழலுக்கு ஏற்ப உத்திகளை மாற்றுகின்ற ஆற்றல், அத்துடன் நமது இனத்தை தவறவிடாமல் முன்னோக்கிச் செல்கின்ற புரிதல் கருத்தியல் புரிதலில் இருந்து தான் உருவாக முடியும்.

கருத்தியல்சார் ஆளுமை (Ideological personality) என்றால் அதற்கு அண்ணன் சிவாஜிலிங்கம் உதாரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |