பரபரப்பாக காவல்துறை படையுடன் சிறைக்கு வந்த கஸ்ஸப தேரர்
கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்து அவர் நேற்று (15) திருகோணமலை சிறைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
திருகோணமலை கடற்கரை சட்ட விரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை தொடர்பான வழக்கு கடந்த 11.11.2026 அன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது கஸ்ஸப தேரர் தவிர்ந்த ஏனைய 13 நபர்களும் நீதிமன்றுக்கு சமூகம் அளித்த நிலையில் வழக்குக்கு சமுகமளிக்காத கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
துறைமுக காவல்துறையினர்
குறித்த வழக்குக்காக நேற்று (15) குறித்த கஸ்ஸப தேரர் திருகோணமலை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவதாக துறைமுக காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |