சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை இரங்கல்!
மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.
இரங்கல் கடிதமொன்றை வெளியிட்டு பேரவை இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஒரு தமிழராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளை தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்குக் கொண்டு வர அவர் அயராது பாடுபட்டுள்ளதாக பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு மாகாண சபையில் தமிழின அழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டதுடன் சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை வலியுறுத்தித் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இறுதிவரை குரல் கொடுத்தவர் சிவாஜிலிங்கம் என பேரவை தெரிவித்துள்ளது.
அன்னாரின் பிரிவால் துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குப் பேரவை தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |