லாஃப்ஸ் எரிவாயு விலைக் குறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று
புதிய இணைப்பு
லாஃப்ஸ் எரிவாயுவின் விலைக் குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (16) பிற்பகலுக்குள் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு இன்று காலை வருகை தந்த லாஃப்ஸ் எரிவாயு நிறுவனப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர் ஒருவர், அதிகாரசபை வளாகத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் விளக்கமளிக்க வருகை தந்துள்ளனர்.

சமையல் எரிவாயு விலையை அண்மையில் அதிகரித்தமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கபட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபை விசாரணைக்காக இன்று (16.11.2026) அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
1,775 ரூபாவால் அதிகரிப்பு
அதன்படி, லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று, இது தொடர்பாகத் தாங்கள் விளக்கத்தை முன்வைப்பதற்காக, இன்று காலை 10 மணிக்கு நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு வருகை தந்தனர்.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் கடந்த 13 ஆம் திகதி தனது சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரித்திருந்தது.
இந்த விலை திருத்தத்திற்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 4,965 ரூபாவிலிருந்து 6,740 ரூபாவாக உயர்த்தப்பட்டது.
அதேவேளை, 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 2,720 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |