மூன்று புதிய அரசியல் கட்சிகளுக்கு வழி திறந்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு
Election Commission of Sri Lanka
Sri Lanka
By Pavi
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(5)ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, குறித்த மூன்று கட்சிகளுக்கான அங்கீகாரம் 2026 ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
மூன்று கட்சிகள்
அங்கீகாரம் பெற்றுள்ள புதிய அரசியல் கட்சிகள் பின்வருமாறு வருமாறு

- எமது மக்கள் முன்னணி (Our People's Front)
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP)
- தமிழ் தேசிய பசுமை அமைப்பு (Tamil National Green Organization)
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறித்த மூன்று கட்சிகளும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தேர்தல் நடவடிக்கைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகக் கருதப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |