செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரி போராட்டம்: யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் ஆதரவு
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டம் இன்று (17/11/2026) முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆசிரியர் சங்கம் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிக்காக முன்னெடுத்து வரும் இந்த அறவழிப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச விசாரணை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரியுள்ள ஆசிரியர் சங்கம், நீதி நிலைநாட்டப்படும் வரை இப் போராட்டத்திற்குத் துணைநிற்கும் என உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |