பெரு இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் போப் லியோவின் கண்ணை தாக்கிய ஜெபமாலை
பெரு நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட பாப்பரசர் லியோ XIV மீது, வீசப்பட்ட ஜெபமாலை ஒன்று அவரது கண்ணை தாக்கியுள்ளது.
தென் அமெரிக்காவிற்கான 12 நாள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று அந்நாட்டின் லிமா நகரிலுள்ள Las Palmas விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற பிரியாவிடை திருப்பலியின்போத இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்த காணொளி காட்சிகளில் பாப்பரசர் தாக்குதலை தொடர்ந்து தனது கண்ணைத் தேய்த்துக் கொள்வதை காட்டுகின்றன.
காயத்திற்கான அறிகுறிகள்
எனினும் அவருக்கு காயத்திற்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் பின்னர் அவர் திருப்பலியைத் தொடர்ந்தார் என்றும், இதன்மூலம் பெரு நாட்டிற்கான அவரது ஆறு நாள் பயணமும், தென்னமெரிக்காவிற்கான அவரது சோர்வுமிக்க 12 நாள் சுற்றுப்பயணமும் நிறைவடைந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |