செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு திருமாவளவன் அஞ்சலி!
யாழ்ப்பாணம் - செம்மணி படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அணையாவிளக்கு நினைவுத்தூபியில் நேற்று (16) மாலை இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழர்களின் வரலாற்றுத் துயரத்தையும், நீதிக்கான அவர்களின் கோரிக்கையையும் நினைவுகூரும் வகையில், செம்மணி அணையா விளக்கு நினைவுத்தூபி செம்மணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் இடைக்கால அறிக்கை...! முற்றாக நிராகரிக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அஞ்சலி செலுத்தினார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நிலையில் செம்மணி அணையா விளக்கு நினைவு தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசனும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |