உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்..! தமிழர்களின் பல வருட கனவு
தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில் தஞ்சை பெரிய கோவில் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்படும் என மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவரும், எம்.பியுமான சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார்.
மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
விலைமதிப்பற்ற பொக்கிஷம்
சஞ்சய் குமார் ஜா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் பெரிய கோவில் இந்தியாவின் ஓர் அதிசயம். இதுவரை வட இந்தியாவில் அமைந்துள்ள தாஜ்மஹாலை மட்டுமே மிகப்பெரிய அதிசயமாக நினைத்திருந்தோம். ஆனால், தஞ்சாவூர் பெரிய கோவில் அதைவிட பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரமாண்டமான கோவிலை உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது. இது நமது நாட்டின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும்.
ஏற்கனவே யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய நினைவுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரிய கோவிலை, உலக அதிசய பட்டியலில் சேர்க்க நாடாளுமன்ற நிலைக்குழு சார்பில் நிச்சயம் பரிந்துரை செய்யப்படும்” என்றார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் இடைக்கால அறிக்கை...! முற்றாக நிராகரிக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உலக அதிசய பட்டியலில்
உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோவிலுக்கு, உலக அதிசயம் என்ற பெருமையும் கிடைக்க வேண்டும் என்பது தமிழர்கள் பலரின் நீண்டகால விருப்பமாக உள்ளது.

இந்நிலையில், பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம்பெறச் செய்ய பரிந்துரைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |