ஐ.பி.எல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சென்னை சுப்பர்கிங்ஸ் அணியின் வீரருமான மகேந்திர சிங் தோனி ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் அவர் சென்னை அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.
தோனி 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியில் இணைந்தார்.
ஐ.பி.எல் ஆட்ட வாழ்க்கை
பின்னர் அந்த அணியை ஐந்து ஐ.பி.எல் கோப்பைகளையும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளுக்கும் வழிநடத்தியுள்ளார்.

அவர் தனது ஐ.பி.எல் ஆட்ட வாழ்க்கையை 38.30 சராசரி மற்றும் 5,439 ஓட்டங்களுடன் எடுத்து நிறைவு செய்கிறார்.
கடந்த நடந்த ஒரு காணொளி அழைப்பின் போது, ஐ.பி.எல் இல் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை எம்.எஸ். தோனி யாருக்கும் தெரியாமல் அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத் கருத்து தெரிவிக்கையில்,
ஐ.பி.எல் 2027-க்கான சி.எஸ்.கே-வின் வீரர் விடுவிப்புகள் மற்றும் ஏல உத்தி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற தோனி, விடுவிக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியலில் தனது பெயரையும் சேர்க்குமாறு அணி நிர்வாகத்திடம் கேட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
திட்டங்கள் பற்றிய உரையாடல்
அந்த அழைப்பின் இறுதியில், பெரும்பாலும் சி.எஸ்.கே-வின் வரவிருக்கும் தொடருக்கான திட்டங்களைப் பற்றியே உரையாடல் அமைந்திருந்தது.

யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்தும் நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தோம்.
நிறைய விவாதங்கள் நடந்தன, அந்த அழைப்பின் முடிவில், விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை காசி(kasi viswanathan) படித்துக் கொண்டிருந்தபோது, எம்.எஸ். மிகவும் அமைதியாக, ஒருவேளை நீங்கள் என் பெயரையும் அதில் சேர்க்கலாம்'என்று கூறினார்.
இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது .
தோனி தனது அறிக்கையை வெளியிட்ட சில கணங்களிலேயே காணொளி அழைப்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டது. தோனியின் முடிவை ஏற்றுக்கொள்வது அணிக்குக் கடினமாக இருந்தது" என அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |