விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின் இல்லம் அமைந்திருந்த காணியின் மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை அடையாளம் தெரியாத நபர்களினால் கிழித்தெறியப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் சிறு வயதில் வசித்த வீடு என குறிப்பிட்டு, அவர் வசித்த வீட்டின் படம் அந்த பதாகையில் இருந்த நிலையில் தற்டபோது அது கிழித்தெறியப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி வெறும் காணியாகவே காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |