நேரக் கொடுப்பனவு மோசடி:ஆனந்த பாலித இன்று நீதிமன்றில் முன்னிலை
தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித்த, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று (17) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் 3.11 மில்லியன் ரூபா பெறுமதியான மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ‘சமகி’ கூட்டு தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் டி.டி. ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான இந்த பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில், ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
ஏழு மணித்தியால வாக்குமூலம்
இந்த மோசடி, 2015 முதல் 2019 வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியை உள்ளடக்கியது என்றும், இதில் சுமார் 3.11 மில்லியன் ரூபா தொகை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் வாக்குமூலம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாகப் பதிவு செய்யப்பட்ட பின்னர் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |