உணவு ஒவ்வாமை - 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
காலை உணவு ஒவ்வாமை காரணமாக 35 மாணவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் வட்டவளை, டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலை ஒன்றில் இன்று (17) காலையில் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் மாணவர்களின் நிலைமை பாரதூரமானதாக இல்லை என மாவட்ட வைத்தியர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணை
குறித்த காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட வாந்தி, மயக்கம் மற்றும் நெஞ்சுவலி காரணமாகவே இந்த மாணவர்கள் குழு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பிரதேச வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு காலை உணவாக சோறு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் கறி மற்றும் கீரைவகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அப்பாடசாலையின் 3 ஆம் தரம் தொடக்கம் 5 ஆம் தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு ஒவ்வாமை காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வட்டவளை காவல்துறையினரும், பொது சுகாதார பரிசோதகர்களும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |