இந்திய மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளவர் வில்லியம் - கேட் தம்பதி
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடல்டன் தம்பதி, தங்களது இந்திய உத்தியோகபூர்வ பயணத்தின்போது மும்பை மெட்ரோவின் அக்வா லைனில் பயணம் செய்துள்ளனர்.
இந்த அரச தம்பதியினர், சாதாரணப் பயணிகளைப் போலவே மும்பையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை அனுபவித்து, விதான் பவனிலிருந்து பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் வரை பயணம் செய்தனர்.
இதற்கிடையில், மும்பையில் இன்று (17) நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான 'எர்த்சொட் பரிசு' விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
காலநிலை மாற்றம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான தீர்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இளவரசர் வில்லியமினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது, உலகளாவிய சுற்றுச்சூழல் முயற்சிகளை அங்கீகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி நேற்று சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து இளவரசர் வில்லியம் கிரிக்கெட்டு விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |