யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழப்பு
Jaffna
Death
Prisons in Sri Lanka
Prison
By Thulsi
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த கைதி நேற்றைய தினம் (17.11.2026), யாழ் போதனாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 09ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை, விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்ட நிலையில் யாழப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அந்நிலையில் சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்டதை அடுத்து, யாழ் போதனாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |