கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களை ஈர்ப்பதற்கான புதிய முன்னுரிமைத் தொழில்துறைகளை கனடா அறிவித்துள்ளது.
கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் தொழிலாளர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC), Express Entry குடியேற்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சமூக சேவைகள்
இந்நிலையில், சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள், திறன்மிகு தொழில்கள், கல்வித்துறை, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM), போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் பணியாற்றும் நிபுணர்கள் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அத்தோடு, கனடாவில் பணி அனுபவம் கொண்ட மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
பிரெஞ்சு மொழித் திறன் கொண்டவர்களும் Express Entry திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெறும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குடியேற்ற நிபந்தனை
கனடாவின் தற்போதைய தொழிலாளர் வளத்தைப் பூர்த்தி செய்வதுடன் முக்கிய துறைகளில் நிலவும் பணியாளர் வெற்றிடங்களை சமாளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என IRCC தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் உரிய தகுதி மற்றும் குடியேற்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலதிக தகவல்களை கனடாவின் உத்தியோகபூர்வ குடிவரவு இணையத்தளமான www.canada.ca இல் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |