தரம் 6 மாணவர் அனுமதிக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர் அனுமதிக்குரிய பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாணவர்களுக்குக் கிடைத்துள்ள பாடசாலையை அறிந்துகொள்வதற்காக விசேட இணையத்தள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை தொடர்பான விபரங்கள்
இதன்படி, https://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து தமக்குக் கிடைத்துள்ள பாடசாலை தொடர்பான விபரங்களைப் பரிசோதிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இந்த இணையத்தளங்கள் ஊடாகத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |