ரூபவாஹினிக்கு தேவையற்ற ஆட்சேர்ப்பு..! கெஹெலிய உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவரின் வழக்கு தற்போது ஒத்திவைக்கபட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் தேவையற்ற வகையில் 6 பேரை நியமித்து, அரசாங்கத்திற்கு ரூ.14.3 மில்லியன் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (17.11.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

குறித்த ஆட்சேர்ப்பில் இரண்டு அலுவலக உதவியாளர்களும் நான்கு சாரதிகளும் உள்ளடங்குவதாகவும், விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிணையில் செல்ல அளுமதிக்கபட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |