யாழ். திருநெல்வேலி பகுதியில் டெங்கு பரவும் சூழல்..! 170,000 ரூபாய் தண்டம்
Jaffna
Supreme Court of Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
By Thulsi
யாழ். திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் கடந்த 11ம், 12ம் திகதிகளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வளாக வீதி, கலாசாலை வீதி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பல்வேறு இடங்களிலும் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 18 வீட்டு உரிமையாளர்கள் இணங்காணப்பட்டனர்.
அவர்களிற்கெதிராக யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று (17.11.2026) பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இனால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான், தலா 10,000 ரூபாய் வீதம் 170,000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |