வெள்ளையர்களுக்கு எதிரான பாகுபாடு குற்றச்சாட்டு: தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணக் கட்டுப்பாடு

By Dharu Sep 16, 2026 08:27 PM GMT
Report

வெள்ளையர்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை ஆதரிப்பதாகக் குற்றம்சாட்டப்படும் தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிவிப்பின்படி,

''இன அடிப்படையிலான பாகுபாடு, இழப்பீடு வழங்காமல் நிலம் பறிமுதல் செய்வதற்கு அனுமதிக்கும் கொள்கைகள் அல்லது சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் பொறுப்பு கொண்டதாகக் கருதப்படும் வெளிநாட்டு நபர்களின் அமெரிக்க விசாக்கள் ரத்து செய்யப்படலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகாரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிய ரிஷாத் பதியுதீன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகாரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிய ரிஷாத் பதியுதீன்

புதிய விசா விண்ணப்பங்கள்

அல்லது அவர்களின் புதிய விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்" என கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) தலைமையிலான அரசாங்கம் வெள்ளையர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்க நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது.

வெள்ளையர்களுக்கு எதிரான பாகுபாடு குற்றச்சாட்டு: தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணக் கட்டுப்பாடு | Us Travel Restrictions On South African Officials

குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் ஆஃப்ரிகானர் சிறுபான்மையினர் தொடர்பான கொள்கைகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்க அரசு நிராகரித்துள்ளது.

அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் புதிய விசா கட்டுப்பாடுகள் குறித்து கவலை தெரிவித்ததுடன், தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு கொள்கைகள் சில தரப்பினரால் தவறாக சித்தரிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

அமெரிக்கா தனது நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக, சில சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படாத தனியார் நிலங்களை இழப்பீடு இல்லாமல் அரசால் கையகப்படுத்த அனுமதிக்கும் தென்னாப்பிரிக்க சட்டம், கருப்பின மக்களுக்கான சம வாய்ப்புகளை அதிகரிக்கும் முன்னுரிமைக் கொள்கைகள் மற்றும் வெள்ளை விவசாயிகள் தொடர்பான சில வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படவுள்ள அதிகாரிகளின் பெயர்களை அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை. 

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் கோர விபத்து! இருவர் பலி ஐவர் படுகாயம்

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் கோர விபத்து! இருவர் பலி ஐவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016