டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது
செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.09.2026) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாயைத் தாண்டியுள்ளது.
சேலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 325.15 ரூபாயிலிருந்து 325.75 ரூபாயாகவும், விற்பனை விலை 334.40 ரூபாயிலிருந்து 335.00 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
டொலரின் கொள்வனவு
NDB வங்கியில் கொள்வனவு விலை 325.00 ரூபாயிலிருந்து 327.50 ரூபாயாகவும், விற்பனை விலை 334.00 ரூபாயிலிருந்து 336.50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 325.93 ரூபாயிலிருந்து 327.91 ரூபாயாகவும், விற்பனை விலை 334.01 ரூபாயிலிருந்து 336.04 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 323.35 ரூபாயிலிருந்து 326.08 ரூபாயாகவும், விற்பனை விலை 333.25 ரூபாயிலிருந்து 336.00 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
சம்பத் வங்கியில் கொள்வனவு விலை 326.00 ரூபாயிலிருந்து 328.00 ரூபாயாகவும், விற்பனை விலை 334.00 ரூபாயிலிருந்து 336.00 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |