கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் : தமிழரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக அரியநேத்திரன் வழக்கு தாக்கல்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன தமிழரசுக் கட்சியின் விதிகளை மீறி கடந்த வருடம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
இந்தநிலையில் இதற்கு எதிராக, தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியோருக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஊடாக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கினை மாவட்ட நீதிபதி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, வழக்கை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துத் திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |