யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மேல் மற்றும் வடமேல் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.அத்துடன் கடல் அலைகள் மிகவும் சீற்றமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பேருவளை வரையான கடற்பகுதியில் சிறிய ரக மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்வதற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
பலத்த மழை
இதேவேளை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நடைதுறையாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.
மாத்தளை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |