2.5 மில்லியன் திருட்டு : நிதி அமைச்சின் செயலாளருக்கு தண்டனை வழங்க கோரிக்கை

Ministry of Finance Sri Lanka Harsha de Silva Harshana Suriyapperuma
By Sathangani Apr 30, 2026 04:29 AM GMT
Report

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும நாடாளுமன்ற நிதிக் குழுவில் முன்னிலையாகாவிடின், நாடாளுமன்ற பொறிமுறையூடாக அவருக்குத் தண்டனை வழங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிற்கு அதிகாரம் உள்ளதாக 'ஃப்ரீ லோயர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.

திறைசேரியிலிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன் கொடுப்பனவு, மூன்றாம் தரப்பு ஒன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், நிதிக் குழுவின் தலைவர் விடுத்த அழைப்பை ஏற்று நிதி அமைச்சின் செயலாளர் இன்று (30) சமூகமளிக்க முடியாது என கடிதம் மூலம் அறிவித்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொப்புள் கொடி உறவுகளால் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி: அரங்கேறிய கொடூரம்

தமிழகத்தில் தொப்புள் கொடி உறவுகளால் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி: அரங்கேறிய கொடூரம்

இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழ், எவரையும் குழுவிற்கு அழைக்கும் அதிகாரம் தலைவருக்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அழைப்பை மீறுவோருக்கு உயர்நீதிமன்றம் அல்லது நாடாளுமன்றத்தின் மூலம் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2.5 மில்லியன் திருட்டு : நிதி அமைச்சின் செயலாளருக்கு தண்டனை வழங்க கோரிக்கை | 2 5 Mn Usd Theft Punidhment To Finance Secretary

இதேவேளை, இப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இது ஹேக்கர்களின் செயலா என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எட்டப்படவில்லை, மின்னஞ்சல் ஊடாக இடம்பெற்ற இந்த கொடுக்கல் வாங்கலில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது என தெரிவித்தார்.

அத்துடன் ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேனிசை செல்லப்பாவிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி அஞ்சலி!

தேனிசை செல்லப்பாவிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி அஞ்சலி!

ஒரு மணிக்குப் பின்னர் நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...!

ஒரு மணிக்குப் பின்னர் நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...!


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி