தேனிசை செல்லப்பாவிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி அஞ்சலி!
மறைந்த தமிழ்நாட்டு பாடகர் தேனிசை செல்லப்பாவிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்துள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (29-04-2026) மணல்காடு கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மரக் கன்று
ஈகை சுடரினை ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் ஏற்றிவைத்து மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து தேனிசை செல்லப்பா அவர்கள் நினைவாக மரக் கன்று ஒன்றும் நாட்டிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்