ஈழத்திற்கு வெளியே ஈழத்தமிழர்களுக்காக தம்மை தியாகித்த 26பேருக்கு றீச்சாவில் நினைவாலயம்
2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அந்தச் சம்பவங்கள் மீதான அரசியல் மற்றும் சமூக விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துவருகின்றன.
இப்போரின் போது பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்ததுடன், இது திட்டமிட்ட இனஅழிப்பாக இருந்ததாக சில தரப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்திய அரசின் பங்கு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, போரை நிறுத்துவதற்கான போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில், தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உணர்வும் துயரமும் உருவானது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் சமூக எழுச்சிகள் நடைபெற்றன.
இவ்வாறான நிலையில் ஈழ விடுதலை போராட்டத்தில் தமிழர்களுக்கு நேர்ந்த துன்பியலை உலகறியச்செய்யவும், ஈழ விடுதலைக்காக தன்னுயிரை தீயிற்கு சமர்ப்பணம் ஆக்கிய தியாகிகளை எதிர்கால சந்ததிக்கு கொண்டு சேர்க்கவும் இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கினைந்த பண்ணையில் ஒரு நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தமிழர் உரிமைப் போராட்டத்தின் அடையாளங்களாகவும் கருதப்படுகிறது....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |