டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் : ஜனாதிபதியின் உத்தரவு
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டு இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான தற்காலிக வீடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த தற்காலிக வீடுகளை மே மாத இறுதிக்குள் கட்டி முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடமைப்பு அமைச்சர்
இது குறித்து வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவிக்கையில், நாட்டில் தற்போது மூன்று மாவட்டங்களை மையப்படுத்தி சுமார் 20 பிரதான தற்காலிக முகாம்கள் செயற்பட்டு வருகின்றன.

சூறாவளி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த சுமார் 500 குடும்பங்கள் தற்போது இந்த முகாம்களில் தங்கியுள்ளனர்.
முகாம்களில் உள்ள மக்களின் அன்றாடச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான தற்காலிகக் குடியிருப்பு வசதிகளை மே மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |