களுத்துறையில் செங்குத்தான பாறையிலிருந்து வான் கவிழ்ந்து விபத்து!
களுத்துறை புலத்சிங்கள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் செங்குத்தான சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த சம்வம் இன்று காலை (07.08.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பதினான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
14பேர் காயம்
விபத்தில் சிக்கிய வான், உடுகலகந்த பகுதியிலிருந்து ஒரு தொழிற்சாலைக்குத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் ஆறு பேர் ஹொரணை மாவட்ட மருத்துவமனையிலும், மேலும் எட்டு பேர் புலத்சிங்கள பிரதேச மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பன்னிரண்டு பேர் பெண்கள் என்றும், வான் ஓட்டுநர் உட்பட இரண்டு ஆண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்களில் யாருக்கும் கவலைக்கிடமான நிலை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |