நாகர்கோவில் படுகொலை: விமானத்தாக்குதலில் அழிக்கப்பட்ட பிஞ்சுகள்...

Sri Lankan Tamils Sri Lanka Final War
By Theepachelvan Sep 22, 2026 10:35 PM GMT
Report

ஈழத் தமிழர் வரலாற்றில் தமிழ் பள்ளிகள் கல்விக்கூடங்களாக மாத்திரமின்றி போரின் குருதிச் சுவடுகளைச் சுமக்கும் நினைவிடங்களாகவும் மாறியது வரலாற்றுத் துயரமாகும்.

அதில் யாழ்ப்பாணம் வடமராட்சியின் நாகர்கோவில் மகா வித்தியாலயம் ஈழத் தமிழினம் மறக்கவியலாத இனவழிப்பின் தடயமாகும்.

1995 செப்டெம்பர் 22ஆம் திகதி, மாணவர்கள் பாடசாலை இடைவேளைப் பொழுதில் இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய விமானத் தாக்குதலில் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதன்போது 26 மாணவர்கள்  படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சவுக்கடிப் படுகொலை: கிழக்கு மண்ணில் அழிக்கப்பட்ட 33 உயிர்களின் குரல்...

சவுக்கடிப் படுகொலை: கிழக்கு மண்ணில் அழிக்கப்பட்ட 33 உயிர்களின் குரல்...

நினைவில் அழியாத துயரம்

அன்றும் வழக்கமான ஒரு பாடசாலை நாள் என்றுதான் பிள்ளைகள் நினைத்திருப்பார்கள். வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மதிய இடைவேளையில் மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் இருந்தனர்.

வானில் விமானங்களின் சத்தம் கேட்டபோது அஞ்சியபடி அவர்கள் பதுங்குவதற்கான இடங்களைத் தேடினர். பாடசாலை என்றபோதும் குண்டுகள் தாக்கின. இத் தாக்குதல் நண்பகல் சுமார் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

சில நொடிகளில் ஒரு பாடசாலை முற்றம் மரணக் களமாக மாற்றியது. புத்தகங்களும் பாடசாலைப் பொருட்களும் சிதறிக் கிடந்த இடத்தில் குழந்தைகளின் உடல்கள் மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தன.

இப் படுகொலை உலகில் எவ்வளவு பெரிய கொடுமையான மனிதாபிமான மீறல் என்பதைப் புரிந்துகொள்ள உயிரிழந்தவர்களின் வயதுகளைப் பார்க்க வேண்டியுள்ளது.

அக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலில் ஆறு, ஏழு, பத்து வயதுடைய சிறுவர்களும், பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து வயதுடைய மாணவர்களும் இருந்தனர்.

அவர்கள் போராளிகளுமல்ல, ஆயுதம் ஏந்தியவர்களுமல்ல, தமது எதிர்காலத்தை கல்வியால் உருவாக்குதற்காக கனவுகளுடன் பாடசாலைக்குச் சென்ற பிள்ளைகள். ஆனாலும் அந்தப் பிள்ளைகள் குண்டுகள் கொட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

உலக நீர் கண்காணிப்பு நாள்: தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம்…

உலக நீர் கண்காணிப்பு நாள்: தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம்…

சிதறிய கனவுகள்

உண்மையில் அக் குழந்தைகள் எவ்வளவு கனவுகளுடன் பள்ளிக்கு வந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒருவர் ஆசிரியராக வேண்டும் என்று நினைத்திருப்பார்.

இன்னொருவர் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டிருப்பார். தமது குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க வேண்டும் என்று மற்றொருவர் எண்ணியிருப்பார். அத்தனை கனவுகளையும் ஶ்ரீலங்கா அரசின் விமானக் கண்டுகள் நசுக்கவிட்டன.

ஒரு தலைமுறையின் கனவுகள் பாடசாலை முற்றத்திலேயே அழிக்கப்பட்டன என்பது எத்தகைய துயரம்? நாகர்கோவில் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில மாணவர்கள் உடல் உறுப்புகளை இழந்தார்கள்.

நண்பர்களை இழந்த குழந்தைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என்று காயங்களுடன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டிய பெரும் அவலத்தை அத் தாக்குதல் ஒரு தலைமுறையிடம் கையளித்தது.

காயமடைந்தவர்களை பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், பிரான்ஸைச் சேர்ந்த எல்லைகளற்ற மருத்துவர்கள் (Médecins Sans Frontières – MSF) அமைப்பைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்களும் சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டனர்.

தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்...

தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்...

90களில் நிகழ்ந்த விமானத்தாக்குதல்கள்

1995ஆம் ஆண்டு இலங்கையின் போர் தீவிரமடைந்திருந்த காலமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இலங்கை அரச படைகள் பாரிய இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

அந்த இராணுவ நடவடிக்கைகளுடன் வான்வழித் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் இடம்பெற்றன. அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நாவலி புனித பேதுரு தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீதான தாக்குதலும் இடம்பெற்றிருந்தது.

அந்தக் காலகட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாகக் கவலை வெளியிட்டிருந்தன. நாகர்கோவில் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் போர்ச் செய்திகளை வெளியிடுவதற்கும் தடைகள் இருந்தன.

அரசாங்கத்தால் ஊடகத் தணிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்ததால், போர்ப் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் உடனடியாகவும் முழுமையாகவும் வெளியில் வருவதற்கு இடையூறுகள் ஏற்பட்டன.

இதனால் நாகர்கோவில் போன்ற தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் உலகின் கவனத்துக்கு செல்வதற்கும் காலதாமதம் ஏற்பட்டது. எனினும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்  தாக்குதல் இடம்பெற்ற இடத்தைப் பார்வையிட்டது.

போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்...

போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்...

நீதிதான் காயங்கள்மீதான மருந்து

ஒரு பாடசாலை மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தை வெறுமனே போரின் ஒரு நிகழ்வாகக் கடந்து செல்ல முடியாது. நாகர்கோவில் படுகொலை இடம்பெற்று 31 ஆண்டுகள் கடந்துவிட்டன.

அதற்கான நீதி இன்னமும் வழங்கப்படவில்லை. தமிழர்கள் இன்று நினைவேந்தல் செய்வதைக்கூட சிங்கள தேசம் கேலி செய்கிறது. தங்கள் வன்மத்தைக் கொட்டுகிறது.

இப்படி இருக்கையில் உள்நாட்டிற்குள் எப்படி நீதியையும் சமத்துவத்தையும் எதிர்பார்க்க முடியும்? சர்வதேச விசாரணைப் பொறிமுறை வாயிலாகவே இத்தகைய பாரிய மனித உரிமை மீறல்களுக்கான நீதியை நாம் எதிர்பார்க்க முடியும்.

உண்மையில் நீதிதான் எல்லாப் படுகொலைகளின் காயங்கள்மீதுதான மருந்து.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 22 September, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026