நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: முக்கிய சந்தேக நபர்களின் பெயர்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் தொடர்பாக அறுபத்திரண்டு சந்தேக நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்களில் 38 பேர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக கருதப்பட்ட 'காட்டுவெல்லகம சுரேஷ்' என்பவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கட்டுள்ளது.
62 சந்தேக நபர்கள்
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற பாரிய மோதலில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொதத்தம் 30 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார பல கருத்துக்களை கடந்த 30-ம் திகதி நீதிமன்ற்திற்கு வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்ற காலத்தில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த 89 சிறைக் காவல் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் அப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொடர்பான அறிக்கைகளையும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு உடுத்துக்கொள்ளபட்ட போது மேற்படி சந்தேக நபர்கள் குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |